ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மார்கழி முதல் நாள் உற்சவம்
ADDED :2568 days ago
திருச்சி: மார்கழி மாத பிறப்பையொட்டி பாவை நோன்பின் முதல் நாளான இன்று திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பரமபதநாதர் சன்னதியிலுள்ள கண்ணாடி அறையில், மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்திற்கு ஏற்ப, நந்தகோபாலன் குமரன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 9வது நாளான இன்று, உற்சவர் நம்பெருமாள் முத்து கிரீடம், கஸ்தூரிதிலகம், முத்து அபயஹஸ்தம், முத்துச்சரம், முத்துக்குறி உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.