உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமானுஜர் பஜனை மடத்தில் மார்கழி மகோற்சவம்

ராமானுஜர் பஜனை மடத்தில் மார்கழி மகோற்சவம்

 புதுச்சேரி:அரங்க ராமானுஜர் பஜனை மடத்தில், மார்கழி மாத மகோற்சவம் இன்று துவங்குகிறது.புதுச்சேரி, செயின்ட் தெரேஸ் வீதியில் அரங்க ராமானுஜர் பஜனை மடம் அமைந்துள்ளது. இங்குள்ள, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆனந்த ரங்கநாதர் சன்னதியில் மார்கழி மாத மகோற்சவம் இன்று துவங்கி, வரும் ஜனவரி 15ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடக்கிறது. இன்று காலை 9:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.விழாவை முன்னிட்டு, தினசரி காலை 5:00 மணிக்கு, ஆண்டாள் அரங்க ராமானுஜர் பூஜனை மண்டலியினரின் திருவீதி பஜனை நடத்துகின்றனர். இதைதொடர்ந்து, தினசரி காலை 6:00 மணிக்கு, திருப்பாவை உபன்யாச நிகழ்ச்சி நடக்கிறது. காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தின் தமிழ்த் துறை பேராசிரியர் வேல் கார்த்திகேயன், உபன்யாசம் நிகழ்த்துகிறார்.விழாவில் 18ம் தேதி காலை 5:00 மணிக்கு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை 6:00 முதல், மறுநாள் காலை 6:00 மணி வரை பக்தி இசைக் குழுவினர் மற்றும் பஜனை கோஷ்டியினர் பங்கேற்கும் அகண்ட நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழா ஏற்பாடுகளை, பஜனை மடத்தின் சிறப்பு அதிகாரி அன்புச்செல்வன், தேவநாத ராமானுஜதாசர் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !