உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி கோவில்களில் மார்கழி மாத தனுர் பூஜை

கள்ளக்குறிச்சி கோவில்களில் மார்கழி மாத தனுர் பூஜை

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி கோவில்களில் மார்கழி மாத தனுர் பூஜைகள் நேற்று (டிசம்., 16ல்)துவங்கியது.கள்ளக்குறிச்சி புண்டரிகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம், அதனைத் தொடர்ந்து பூதேவி, ஸ்ரீதேவி பெருமாள் உற்சவமூர்த்திகளுக்கு அலங்கார திருமஞ்சனமும், சிறப்பு பூஜைகளும் நடந்தது.கேசவராமானுஜ கூட பஜனை மடத்தில் பாகவத கோஷ்டியினர் திருவெம்பாவை பாடி வழிபட்டனர். அதேபோல் சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி, தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்கள் பாடி, சங்கு முழக்கி, கயிலாய வாத்தியங்கள் இசைத்து, சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.சிவகாமசுந்தர சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.

இதுபோன்று கமலா நேரு தெரு காமாட்சி அம்மன் கோவில், கெங்கையம்மன், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஆஞ்சநேயர், அண்ணா நகர் விஷ்ணுதுர்க்கை, ராஜராஜேஸ்வரி கோவில், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்சோதி நாதர் கோவிலில், முடியனூர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர் ஆகிய கோவில்களில் தனுர் மாத பூஜைகள் நடந்தது. மார்கழி மாதம் நேற்று (டிசம்., 16ல்) துவங்கி 30 நாட்களும் காலையில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !