சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயில் பரமபதவாசல் திறப்பு
ADDED :2590 days ago
சிதம்பரம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் அமைந்துள்ளது. இங்கு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை 6.00 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு கோவிந்தராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.