உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி இராமர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

தாண்டிக்குடி இராமர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

தாண்டிக்குடி : தாண்டிக்குடி இராமர் கோயிலில் அதிகாலையில் சிறப்பு அபிேஷக, ஆராதனையுடன், மலர் அலங்காரத்தில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. சவுமிய நாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் நகர் வலம் வருதலும், பக்தர்கள் மஞ்சள் நீராட்டு செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. பண்ணைக்காடு, பூலத்துார், கே.சி.பட்டி, கும்பறையூர் பகுதியிலுள்ள பெருமாள் கோயில்களிலும் விழா சிறப்பாக நடந்தது.


சின்னாளபட்டி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில், சிறப்பு பூஜைகளுடன் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் வெங்கடேசப்பெருமாள் கோயிலில், பெருமாள், மகா லட்சுமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவருக்கு, சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. மகா தீபாராதனையைத்தொடர்ந்து, கோவிந்தா கோஷத்துடன் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. கன்னிவாடி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், மூலவர், பரிவார தெய்வங்களுக்கு விசேஷ அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !