கட்டிக்குளத்தில் பாசி படர்ந்த தெப்பக்குளம்
மானாமதுரை : மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் ராமலிங்கசாமி கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் முழுவதும் பாசி படர்ந்துள்ளதால் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். 150 ஆண்டு பழமை வாய்ந்த இந்த தெப்பக்குளத்தில் தற்போது கட்டிக்குளம் கண்மாய்க்கு வைகை ஆற்றில் தண்ணீர் வந்ததை அடுத்து தெப்பக்குளத்திலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை இந்த தண்ணீரை மக்கள் குளிக்கவும்,துணி துவைக்க பயன்படுத்தி வந்தனர்.கடந்த ஒரு வாரத்திற்குள்தெப்பக்குளத்திற்குள் உள்ள தண்ணீர் தெரியாத அளவிற்கு பச்சை பசேலென பாசி படர்ந்து காணப்படுகிறது.இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.இது குறித்து கிராம மக்கள்கூறியதாவது: கடந்த பல வருடங்களாக தண்ணீரின்றி கிடந்த தெப்பக்குளத்தில் தற்போது தண்ணீர் நிறைந்துள்ளது.ஆனால்பாசி படர்ந்து அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.ஆகவே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெப்பக்குளத்திற்குள் படர்ந்துள்ள பாசிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.