உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இராப்பத்து

ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இராப்பத்து

ஸ்ரீபெரும்புதுார்: ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், இராப்பத்து உற்சவ விழாவின் இரண்டாம் நாளான நேற்று, ரங்கநாதர் திருக்கோலத்தில் பெருமாள் காட்சியளித்தார். ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜர் அவதரித்ததால், ஆதிகேசவ பெருமாள் கோவில், நித்ய சொர்க்க வாசல் தலமாக கருதப்படுகிறது. எனவே, இங்கு சொர்க்க வாசல் கிடையாது.வைகுண்ட ஏகாதசியான நேற்று முன்தினம், ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அப்போது, சொர்க்க வாசல் திறப்பதைப் போல, சன்னிதியின் கதவுகள் திறக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.இதைத் தொடர்ந்து, இராப்பத்து உற்சவ விழா துவங்கியது. விழாவின் இரண்டாவது நாளான நேற்று, ரங்கநாதர் திருக்கோலத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல், 3:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. இரவு, நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டன; வீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !