உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலுக்கு ரூ.7 லட்சம் நன்கொடை: 20 ஆண்டுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடு

கோயிலுக்கு ரூ.7 லட்சம் நன்கொடை: 20 ஆண்டுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடு

மதுரை, தமிழக இந்து கோயிலுக்கு ஏழு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குபவருக்கு வைர அட்டை வழங்கப்படும். இதன் மூலம் தமிழகத்தின் அனைத்து இந்து கோயில்களிலும் நன்கொடையாளர் குடும்பத்துடன், ஏழு நபர்களுக்கு மிகாமல் 20 ஆண்டுகளுக்கு சிறப்பு தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கி இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக இந்து கோயில்களில் நன்கொடையாளர் பங்களிப்புடன், அன்னதானத் திட்டம் நடக்கிறது.

நன்கொடையாளர் தங்களின் சுப நிகழ்ச்சி நாட்கள் மற்றும் அவரவர் விரும்பும் நாட்களில் 100 நபர்களுக்கு 2,500 ரூபாய் செலுத்தி ஒருநாள் அன்னதானம் திட்டத்தில் பங்கேற்கலாம். கட்டளைதாரராக விரும்புவோர் 35 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இத்தொகையை கோயில் நிர்வாகம் வங்கியில் முதலீடு செய்யும். அதிலிருந்து கிடைக்கும் வட்டியில் ஆண்டுக்கு ஒருமுறை நன்கொடையாளர் விரும்பும் நாளில் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.இந்து கோயிலுக்கு ஏழு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குபவருக்கு, வைர அட்டை வழங்கப்படும். இதன் மூலம் தமிழகத்தின் அனைத்து இந்து கோயில்களிலும் நன்கொடையாளர் குடும்பத்துடன் ஏழு நபர்களுக்கு மிகாமல் 20 ஆண்டுகளுக்கு சிறப்பு தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கி இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உத்தரவிட்டுள்ளது.கோயில் ஒன்றில் நித்திய பூஜை செய்ய நாள் ஒன்றுக்கு 750 ரூபாய் செலவாகிறது. இதற்கு 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வோர், அவர் விரும்பும் நாளில் மட்டும் முதலீட்டு தொகையில் இருந்து வரும் வட்டி தொகையில் நித்திய பூஜை கட்டளை செய்யப்படும். நன்கொடைக்கு 80 ஜி ன்படி வரி விலக்கு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !