மேல்நாரியப்பனுார் ஆலயத்தில் 73 அடி சிலுவை கொடி கம்பம்
ADDED :2502 days ago
சின்னசேலம்: மேல்நாரியப்பனுார் புனித அந்தோணியர் ஆலையத்தில் புதிய சிலை மற்றும் 73 அடி உயர சிலுவை கொடி கம்பம் திறப்பு விழா நடந்தது.சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுாரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் நுாற்றாண்டு சிறப்பு வாய்ந்ததாகும். இவ்வாலயத்தில் புதிய அன்னை மரிய மாதா சிலை மற்றும் கொடி கம்பம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.நிகழ்ச்சிக்கு பங்குதந்தை பால்ராஜ் தலைமை தாங்கினார். புதுவை - கடலுார் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் திருப்பலி பூஜை செய்து அன்னை மரியமாதா சிலை மற்றும் 73 அடி உயர சிலுவை கொடி கம்பத்தை திறந்து வைத்தார். இதில் மறைமலை நிர்வாகிகள் மற்றும் காரியகாரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.