உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடுமுடி பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா

கொடுமுடி பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா

கொடுமுடி: பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கொடுமுடி வட்டாரம், ஊஞ்சலூர் அருகே கருக்கம்பாளையத்தில், பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல் விழா, கடந்த, 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று சுவாமிக்கு, 60 வகையான மூலிகை அபிஷேகம் நடந்தது. இன்று (டிச.,20) பொங்கல் விழாவும், இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. நாளை, மஞ்சள் நீராட்டு விழாவுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !