தி.மலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2849 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோயிலில், நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு, பால் அபிஷேகம், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.