ஷூவுடன் போலீஸ்: சபரிமலை சன்னிதானத்தில் சுத்தி பூஜை
ADDED :2562 days ago
சபரிமலை: சபரிமலை வந்த திருநங்கையருக்கு பாதுகாப்பு அளிக்க மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை போலீசார் நிறுத்தப்பட்டனர். இவர்களில் சிலர் ஷூ அணிந்திருந்தது, சர்ச்சையை கிளம்பியது. அவசரத்தில் நடைபெற்ற தவறு என சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி விளக்கம் அளித்தார். இந்நிலையில், தந்திரி கண்டரரு ராஜீவரருவின் தலைமையில் சன்னிதானம் முழுவதும் சுத்தி கலச பூஜை செய்யப்பட்டது. போலீசார் விரதம் இருந்து சபரிமலை பணிக்கு வந்த காலம் மாறி, ஷூ அணிந்து வருகின்றனர் என்று முன்னாள் தேவசம்போர்டு தலைவரும், பா.ஜ., மாநில துணை தலைவருமான ராமன்நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.