கரபுரநாதர் கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜை
வீரபாண்டி: திருக்கார்த்திகை நட்சத்திரம், பிரதோஷ திதி சேர்ந்து வந்ததால், கரபுரநாதர் கோவிலில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், சஷ்டி, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி உள்ளிட்ட நாட்களில், பல்வேறு குழுக்கள் சார்பில், சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. நேற்று, முருகன் அவதரித்த திருக்கார்த்திகை நட்சத்திரம், அப்பன் ஈசனுக்கு உகந்த பிரதோஷ திதி ஒன்றாக, குருபகவானுக்கு உகந்த வியாழனில் வந்ததால், கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. மாலை, நந்தி தேவருக்கு சிறப்பு அபி ?ஷகம் செய்து, பெரியநாயகி சமேத கரபுரநாதர், காளை வாகனத்தில் எழுந்தருளச் செய்து, பக்தர்கள், கோவிலை சுற்றி வலம்வந்தனர். அதேபோல், வள்ளி, தெய்வானையுடன், சுப்ரமணியரை, மயில் வாகனத்தில் எழுந்தருளச்செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் சிவாச்சாரியார்கள், வழிபாட்டு குழுவினர், கட்டளை உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.