உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் கிரிவல பாதையில் விளக்குகள் பக்தர்கள் கோரிக்கை

சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் கிரிவல பாதையில் விளக்குகள் பக்தர்கள் கோரிக்கை

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் அடிவாரத்தில் தெரு விளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சி.என்.பாளையத்தில் மலையாண்டவர் என்கிற ராஜ ராஜேஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவில் மலையின் மீது உள்ள கோவிலில் சித்தர்கள் ஜீவசமாதியடைந்துள்ளனர். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் மலையடி வாரத்தை 16 முறை வலம் வந்து கிரிவல பூஜை செய்து வருகின்றனர். பவுர்ணமி அன்று அம்மன் ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலின் அடிவாரத்தில் தெரு விளக்குகள் இல்லாததால் பவுர்ணமி கிரிவலம் வரும் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மலையடிவாரம் இருளாக உள்ளதால் சுற்று பகுதியை சேர்ந்தவர்கள் இயற்கை உபாதைகள் கழிக்கும் இடமாக மாற்றி விட்டனர். எனவே, மலையடி வாரத்தில் தெரு விளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !