பஞ்சமூர்த்தி பவனி
ADDED :5021 days ago
சிவன்கோயில்களில் உள்ள விநாயகர், முருகன், சிவன், அம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகியோரை பஞ்சமூர்த்திகள் என்பர். விழாக்காலத்தில் சுவாமி புறப்பாட்டின்போதும், தேர்பவனியின் போதும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள்வர். பஞ்சமூர்த்திகளில் சிவன் மட்டும் சோமாஸ்கந்த வடிவில் இருப்பார். அதாவது சிவன், அம்பாள், நடுவில் குழந்தை முருகன் என சேர்ந்து இருப்பது வழக்கம். அம்பிகை சுவாமியோடு இணைந்தும், தனித்தும் இருவிதமாக இருப்பாள்.