உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் மார்கழி பவுர்ணமி: 12 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

சதுரகிரியில் மார்கழி பவுர்ணமி: 12 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரியில் மார்கழி பவுர்ணமியை முன்னிட்டு, கடந்த 4 நாட்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிப்பது வழக்கம். அதன்படி மார்கழி பவுர்ணமியை முன்னிட்டு, கடந்த டிச.20 முதல் பக்தர்கள் அனுமதிக்கபட்டனர்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து, வனப்பகுதி ஓடைகளில் போதிய நீர்வரத்து இல்லாதநிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். தாணிப்பாறை விநாயகர்கோயில், பேச்சியம்மன்கோயில், பிலாவடி பேச்சியம்மன்கோயில், சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.  இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து  நான்கு நாட்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !