உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு அபிஷேகம்

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு அபிஷேகம்

கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேகம் நடந்தது.கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று (டிசம்., 23ல்) காலை 5:00 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி, மாணிக்கவாசகருக்கு மகா அபிஷேகம் நடந்தது. 8:00 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகமும், 12:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு தீபாராதனையும் நடந்தது. நடராஜர், சிவகாமசுந்தரி ஆனந்த நடனமாடி கோபுர தரிசனம் நடந்து முடிந்து, ராஜ வீதியுலா நடந்தது.தொடர்ந்து, சிவகர தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி, ஊடல் உற்சவம், திருக்கல்யாணமும் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !