சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம்
ADDED :2493 days ago
சிதம்பரம்: சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன மகா அபிஷேகம் நடந்தது.பதஞ்சலி முனிவரும், வியாக்கிரபாதரும் சிதம்பரத்தில் சவுந்திரநாயகி சமேத அனந்தீஸ்வரரை வழிப்பட்ட சிறப்பு மிக்க ஸ்தலம்.ஆருத்ரா தரிசனத்தையொட்டி சவுந்திரநாயகி அம்மன் சமேத அனந்தீஸ்வரர் சுவாமிக்கு நேற்று (டிசம்., 23ல்) காலை மகா மண்டபத்தில் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின், திருவெண்பா பாடி மகா தீபாராதனை நடந்தது.
நடராஜர் மஞ்சத்தில் அமர்ந்து சுவாமி புறப்பாடு செய்து, பிரகாரம் வலம் வந்து காட்சியளிக்கும் மகா தரிசனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.