காஞ்சிபுரம் திருவாதிரை திருமுறை பெருவிழா
ADDED :2495 days ago
காஞ்சிபுரம்: ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி, திருவாதிரை திருமுறை பெருவிழா, காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில் நடந்தது.திருவாதிரை திருமுறை பெருவிழா குழுவினர் மற்றும் காஞ்சி நகர செங்குந்த மரபினர் சார்பில் நடந்த இவ்விழாவை, ஓதுவார் த.தமிழ்செல்வன் இறைவணக்கத்துடன் துவக்கி வைத்தார்.திருத்தணி ஓதுவார் என்.சுவாமிநாதன் குழுவினரின், சிறப்பு திருமுறை இன்னிசை நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, திருமுறை திருப்புகழ் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.