ப.வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆருத்ரா தரிசன விழா
ADDED :2565 days ago
ப.வேலூர்: ப.வேலூர், சுற்றுவட்டார பகுதி கோவில்களில், ஆருத்ரா தரிசன விழா நடந்தது. ப.வேலூர் அடுத்த, நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில், மார்கழி மாத திருவாதிரை யை முன்னிட்டு, சிவகாமி அம்பிகை நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதில், சிவகாமி அம்பிகை உடனுறை நடராஜபெருமானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமான பெண்கள், மாங்கல்யம் நிலைத்திருக்க வேண்டி, அவர்களது கணவர்களுக்காக விரதமிருந்து சுவாமி தரிசனம் செய்து மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். இதேபோல் மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஷ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், பொத்தனூர் காசி விஸ்வநாதர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.