உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளத்தில் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில், திருவாதிரை பூஜை

பெரியகுளத்தில் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில், திருவாதிரை பூஜை

பெரியகுளம்: பெரியகுளத்தில் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில், சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

கைலாசபட்டி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோயிலில், கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் கைலாசநாதர் காட்சியளித்தார். ஏராளான பக்தர்கள் தரிசனம் பெற்றுச் சென்றனர்.

* தேவதானப்பட்டி:சில்வார்பட்டி முனையடுவார் நாயனார் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நடராஜர் உற்ஸவர் சப்பரத்தில் அலங்காரம் செய்து கடைவீதி, பெரிய வீட்டுத்தெரு, பால்பண்ணைத் தெரு உள்ளிட்ட கிராமத்தின்முக்கிய வீதிகளில் உலா வந்தார். பக்தர்கள் அபிஷேகம் செய்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !