அறநிலைய துறையின் புது இணைய தளம் துவக்கம்
ADDED :2488 days ago
சென்னை: புதிதாக வடிவமைக்கப்பட்ட, அறநிலைய துறையின் இணைய தளம், நேற்று துவக்கப்பட்டது.அறநிலைய துறையின் இணைய தளம், தனியாரால் வடிமைக்கப்பட்டு, தனியார் கட்டுபாட்டில் செயல்பட்டு வந்தது. இதில், பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, அறநிலையத்துறை கமிஷனர் ராமச்சந்திரன், மத்திய அரசின், என்.ஐ.சி., எனப்படும், தேசிய தகவலியல் மையம் உதவியுடன், அறநிலைய துறையின் இணையதளத்தை https://tnhrce.gov.in புதிதாக வடிமைத்தார்.இதன் துவக்க விழா,அறநிலைய துறை தலைமையகத்தில், நேற்று மாலை நடந்தது. துறை அமைச்சர் ராமச்சந்திரன், புதிய இணையதள சேவையை துவக்கி வைத்தார். இதன் வழியே, கோவில்களில் நடக்கும் திருவிழாக்கள், சிறப்பு சேவைகள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.