உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் தல வரலாற்று பலகைக்கு பாதுகாப்பு அமைக்க கோரிக்கை

கைலாசநாதர் கோவிலில் தல வரலாற்று பலகைக்கு பாதுகாப்பு அமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம்: கைலாசநாதர் கோவிலில், புதிதாக வைக்கப்பட்டுள்ள தல வரலாற்று பலகைக்கு, பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என, பயணியர் தெரிவித்து உள்ளனர். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலுக்கு, பல்வேறு நாடுகள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். இதனால், இந்த கோவிலை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில், தல வரலாறு வைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்தது. இதையடுத்து, கருங்கல் பீடத்துடன், கோவில் தல வரலாறு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பலகைக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படாததால், விஷமிகள் பலகையை சேதப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதனால், தல வரலாற்று பலகைக்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி, இரவில் படிக்க வசதியாக மின் விளக்கு பொருத்த வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் பலகையில், இந்த கோவில் மகேந்திர வர்மனால் எந்த ஆண்டு கட்டப்பட்டது; கோவிலில் எத்தனை துணை சன்னிதிகள் உள்ளிட்ட விபரம் தமிழ், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !