மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி பிரதட்சணம் விழா
ADDED :2492 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி பிரதட்சணம் திருவிழா டிச., 29 நடக்கிறது. அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் உணவு வழங்குவதை போற்றும் விழாவாக அஷ்டமி பிரதட்சணம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமி சப்பரங்கள் டிச.,29 அதிகாலை 5:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பாடாகி யானைக்கல், வடக்கு, கிழக்கு, தெற்கு வெளி வீதிகள், திருப்பரங்குன்றம் சாலை வழியாக மேலவெளி வீதி, குட்ெஷட் தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட் வீதி, காமராஜர் சாலை, விளக்குத்துாண், கீழமாசி வீதி தேரடி வந்து சேத்தியாகும். அங்கு தீபாராதனைகள் நடத்தி பிரசாதம் வழங்கப்படும். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.