வத்தலக்குண்டில் கிறிஸ்துமஸ் சப்பர பவனி
ADDED :2483 days ago
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு மேலக்கோயில்பட்டியில் கிறிஸ்துமஸ் சப்பர பவனி நடந்தது.
கிறிஸ்துமசை முன்னிட்டு வத்தலக்குண்டு தோமையார், மேலக்கோயில்பட்டி அந்தோணி யார் ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. வத்தலக்குண்டில் பங்கு பாதிரியார் சேவியர், உதவி பாதிரியார்கள் ரெக்ஸ்பீட்டர், ஜஸ்டின் பிரபு, திருப்பலி நடத்தினர். வத்தலக்குண்டு,
மரியாயிபட்டி, சின்னுபட்டி, கரட்டுபட்டி கிராமத்தினர் பங்கேற்றனர்.
மேலக்கோயில்பட்டியில் பங்கு பாதிரியார் ஜெயராஜ், உதவி பாதிரியார் ஆண்டனி செழியன் தலைமையில் திருப்பலி நடந்தது. அன்பியங்கள் சார்பில் குடில்கள் அமைக்கப்பட்டது. இயற்கை பொருட்களுடன் அமைக்கப்பட்ட குடிலுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. நேற்று
முன்தினம் (டிசம்.,25ல்) இரவு குழந்தையேசு, மரியாளுடன் வாணவேடிக்கை, தப்பாட்டத்துடன் மின்சார சப்பர பவனி நடந்தது.