உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்தில் புஷ்பாஞ்சலி

கோவை ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்தில் புஷ்பாஞ்சலி

 கோவை: கோவை ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்தில், புஷ்பாஞ்சாலி, கனகாபிஷேக விழா இன்று நடக்கிறது.கோவை, ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், 68வது பூஜா மஹோத்சவம் சிறப்பாக நடந்து  வருகிறது.


நான்காம் நாளான நேற்று காலை, 7:00 மணிக்கு ஸங்கல்பம் நடைபெற்றது. தொடர்ந்து, நல்ல புத்ரன்கள் பிறக்க, ப்ரதிபந்தக தோஷம் நீங்கவும் மஹா புருஷஸூக்த ஹோமம், ஐஸ்வர்யம்  கிடைக்கவும், தன தான்யாதி ஸ்ம்பத்துகள் ஏற்பட ஸ்ரீஸூக்த ஹோமம், மனதை ஒரு நிலைப்படுத்தவும், நல்ல தேஜஸ் உருவாகவும், சகல ஷேமங்கள் ஏற்பட ஹரிஹர புத்ர மூல மந்த்ர ஹோமம்  நடந்தது.காலை, 8:00 மணிக்கு, ஸ்ரீஐயப்பன் லட்சார்ச்சனை மற்றும் திரவியங்களால் அஷ்டாபிஷேக பூஜை நடந்தது. பகல், 12:00க்கு மஹா பூர்ணாஹூதி, வசோர்தாரை, மஹா தீபாராதனை, இரவு,  7:00க்கு கொச்சின் கிருஷ்ணன் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடந்தது.இன்று காலை, 5:00 மணிக்கு துவாதச சூர்ய நமஸ்காரம், ருத்ராபிஷேகம், ஷண்முக அர்ச்சனை, 9:00க்கு பஞ்சவாத்யம் முழங்க  திருவாபரண பெட்டியுடன், மூன்று யானைகளில், ராம்நகரில் திருமஞ்சன உலா நடக்கிறது. அதே சமயம், கோவை ஸ்ரீஜெயராமன் பாகவதர் குழுவினரின் திவ்ய நாம பஜனையும் நடைபெறுகிறது.  இதன் பின், ஆண்டு மலர் வெளியீட்டு விழா மற்றும் பள்ளி கல்லுாரி மாணவர்கள், 100 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.பகல், 11:30க்கு புஷ்பாஞ்சலி மற்றும் கனகாபிஷேகம், மதியம்,  1:00க்கு மஹா தீபாராதனை, மாலை, 6:05க்கு புஷ்ப பல்லக்கில், மூன்று யானைகளுடன் பஞ்சவாத்தியம் முழங்க பூக்காவடிகளுடன், ஸ்ரீஐயப்பன் வீதி உலா, மாலை, 6:30க்கு சரவணம்பட்டி  சங்கீதப்ரியா பஜன் மண்டலி குழுவினரின் பக்திபாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.நாளை, (31ம் தேதி) இரவு, 9:00 மணிக்கு, மேட்டுப்பாளையம் ஸ்ரீவாசுதேவன் குழுவினரின் திவ்யநாம பஜன், இரவு,  12:00 மணிக்கு மங்கள மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !