சனி பகவான் கோவிலில் சுப்ரீம்கோர்ட் நீதிபதி
ADDED :2467 days ago
காரைக்கால்:திருநள்ளார் சனி பகவான் கோவிலில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி, நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.காரைக்கால் திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி நேற்று வந்தார். அவரை கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்த ராஜா, எஸ்.பி.,மாரிமுத்து ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.நீதிபதி இந்திரா பானர்ஜி், தர்பாரண்யேஸ்வரர், முருகன்,விநாயகர், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தார்.பின், சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு, சனி பகவானை தரிசனம் செய்தார். கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள், மாவட்ட வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.நீதிபதி வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்து.