உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுஷ்டான குளம் உற்சவம் : ராமானுஜர் கோவிலில் விமரிசை

அனுஷ்டான குளம் உற்சவம் : ராமானுஜர் கோவிலில் விமரிசை

 காஞ்சிபுரம்: செவிலிமேடு, ராமானுஜர் கோவிலில், அனுஷ்டான குளம் உற்சவம், நேற்று விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வரதராஜ பெருமாள், ராமானுஜரை  தரிசித்தனர்.காஞ்சிபுரம், செவிலிமேடு கோவிலில், ராமானுஜருக்கு தனி சன்னிதி உள்ளது. ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் அனுஷ்டான குளம் உற்சவத்தில், வரதராஜ பெருமாள்  எழுந்தருள்வார்.திருமஞ்சனம்நேற்று காலை, 11:00 மணிக்கு, பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்ட வரதர், செவிலிமேடு ராமானுஜர் கோவிலை சென்றடைந்தார்.அங்குள்ள சாலை கிணற்றின் புனித  நீரில், பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.தொடர்ந்து, பெருமாள், தாயார் வேடுவர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.மண்டகப்படிதீபாராதனை முடிந்து, மாலை, 3:30 மணிக்கு,  அங்கிருந்து, தேசிகன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு, பெருமாளுக்கு மண்டகப்படி நடைபெற்றது. அங்கிருந்து விடைபெற்ற பெருமாள், மாலை, 6:30 மணிக்கு, கோவிலை  சென்றடைந்தார்.அனுஷ்டான குளம் உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வரதராஜ பெருமாள், ராமானுஜரை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !