தேவகோட்டையில் படியளக்கும் நிகழ்ச்சி
ADDED :2558 days ago
தேவகோட்டை: தேவகோட்டை நகர சிவன் கோயில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அனைத்து ஜீவராசிகளுக்கும் சுவாமிகள் படியளக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நேற்று நகர சிவன் கோயிலில் இருந்து விநாயகர், சுப்ரமணியர், மீனாட்சி, மீனாட்சி சுந்தரேசுவர், சண்டிகேஸ்வரர் சப்பரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிகள் தேவகோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மக்களுக்கு படியளந்தனர். பின்னர் கோயிலின் முன் பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு ஆராதனை நடந்தது.