உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துவ ஆலயங்களில் புத்தாண்டு பிரார்த்தனை

கிறிஸ்துவ ஆலயங்களில் புத்தாண்டு பிரார்த்தனை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

மாவட்டத்தில் 2019 ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று (டிசம்., 31ல்) நள்ளிரவில் துவங்கியது.

மாவட்டத்தில் உள்ள 306 கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நள்ளிரவில் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

விருதுநகர் தூய இன்னாசியர் ஆலயத்தில் இரவு 10:45 மணி முதல் பாதிரியார் பெனடிக் அம்புரோஸ் ராஜ், துணை பாதிரியார் அகஸ்டின் தலைமையில் கடந்த ஆண்டு இறைவன் செய்த நன்மைக்காக நன்றி வழிபாடு, நற்கருணை ஆசிர் நடந்தது. நள்ளிரவு புத்தாண்டு திருப்பலி, மறையுரையும் நடந்தது.

விருதுநகர் நிறைவாழ்வு நகர் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பாதிரியார் தாமஸ் வெனிஸ் தலைமையில் நன்றிவழிபாடுகளும், நற்கருணை ஆசீர் நடந்தது.

பாண்டியன் தூய சவேரியார் ஆலயத்தில் 11:00 மணிக்கு பாதிரியார் மைக்கேல், துணை பாதிரியார் ஜெயராஜ் தலைமையில்  எஸ்.எப்.எஸ். பள்ளி முதல்வர் அருள் பிரான்சிஸ் தலைமையில் நன்றி வழிபாடுகளும், நற்கருணை ஆசிர் நடந்தது.

ஆர்.ஆர். நகர் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பாதிரியார் பெனடிக் பர்னபாஸ் தலைமையில் நன்றி வழிபாடு நடந்தது. தேவாலயத்தில் நடந்த புத்தாண்டு விழாவில் கிறிஸ்தவர்கள் புத்தாண்டை அணிந்து குடும்பதினருடன் கலந்து கொண்டனர். நள்ளிரவு 12:01க்கு மெழுகு வர்த்தி ஏந்தி புத்தாண்டை வரவேற்றனர்.

திருப்பலிநிறைவில் இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர். இதை தொடர்ந்து இன்று (ஜன., 1ல்) காலை 8:30 மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப்பலி மறையும் நடக்கிறது.

* விருதுநகர் சி.எஸ். ஐ., யோவான் திருச்சபையில் இரவு 11:00 மணிக்கு முந்தைய ஆண்டின் வழிபாடு நடந்தது. அதன்பின் புத்தாண்டின் வாக்குதத்த வழிபாடும் இறை ஆசி வழங்கும் நிகழ்ச்சி பாஸ்டர் ராஜா ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

இதில் தென்னிந்திய திருச்சபை சேர்ந்த சி.எஸ். ஐ., கிறிஸ்தவர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்று புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !