உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தாண்டு கொண்டாட்டம் கடலுார் கோவில்களில் சிறப்பு பூஜை

புத்தாண்டு கொண்டாட்டம் கடலுார் கோவில்களில் சிறப்பு பூஜை

கடலுார்: ஆங்கில புத்தாண்டையொட்டி, கடலுார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஆங்கில புத்தாண்டையொட்டி, மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான திருவந்திபுரம் தேவநாதசுவாமி, சிதம்பரம் நடராஜர், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்தனர். சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும், நகர பகுதிகளில் உள்ள பூங்காக்கள், சுற்றுலாத் தளமான பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கடலுார், தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் ஏராளமானோர் கூடினர். மாவட்டம் முழுதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !