உடுமலை பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலா பயணியர்
ADDED :2557 days ago
உடுமலை: ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, உடுமலை, திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலா பயணியர் திரண்டனர்.உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவி, மலை மேல், 950 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
புத்தாண்டு தினமான நேற்று (ஜன., 1ல்), காலை முதலே, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வந்தனர்.வழக்கத்தை விட, பனி அதிகரித்த நிலையில், கடும் குளிரில் அருவியில், நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்ந்தனர். சபரிமலை சீசன் காரணமாக, அய்யப்ப பக்தர்களும் ஏராளமானவர்கள் வந்திருந்தனர்.
மலையடிவாரத்திலுள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.