காஞ்சிபுரம் அகத்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
ADDED :2557 days ago
காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில், மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில், அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.பழுதடைந்திருந்த இக்கோவில், இரண்டு நிலை
விமானத்துடன், அம்பாள், பரிவார சன்னிதிகள் மற்றும் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்தாண்டு, நவ., 11ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
நேற்று (ஜன., 1ல்), இக்கோவிலில், மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. இதில், மூலவர், கிராம தேவதை, பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில், கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.