பொள்ளாச்சி ஜோதிநகரில், மண்டல பூஜை விழா
ADDED :2831 days ago
பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஜோதிநகரில், ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் சார்பில், மண்டல பூஜை விழா நடந்தது.பொள்ளாச்சி ஜோதிநகர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் சார்பில், 31ம்
ஆண்டு அன்னதானம் மற்றும் மண்டல பூஜை விழா அமைதி நகரில் நடந்தது. இதில், வாழை மட்டையில் கோபுரம் அமைத்து, விநாயகர், முருகன், ஐயப்பன் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதில், ஐயப்ப பக்தர்கள் பக்தியுடன் பஜனை பாடல்களை பாடினர். பின்னர், 18ம் படி ஏற்றி சரண கோஷங்கள் முழுங்க ஐயப்பனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது.