திருப்பூர், ஐயப்பன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED :2508 days ago
திருப்பூர்:திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள, ஐயப்பன் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.திருப்பூரில் இயங்கும், பக்தி மார்க்கம் டிரஸ்ட் சார்பில், அனுமன் ஜெயந்தி விழா, திருப்பூர் ஐயப்பன் கோவிலில், வரும், 5ம் தேதி நடக்கிறது. அன்று மாலை நடக்கும் விழாவில், ஸ்ரீமத் அஹோபிலமடத்தின் ஆஸ்தான வித்வான் ராஜகோபால சுவாமி, ஸ்ரீமத் சுந்தரகாண்டம் என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாற்றுகிறார்.பவானி குருபிரசாத் ஆச்சார், பக்தர்களுக்கு ஆசியுரை வழங்க உள்ளார். விழாவுக்கான ஏற்பாடுகளை, பக்தி மார்க்கம் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.