கிணத்துக்கடவு ஆங்கில புத்தாண்டு: கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :2508 days ago
கிணத்துக்கடவு :ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று (ஜன., 1ல்)அதிகாலை முதல், கிணத்துக்கடவு, நெகமம் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
சுற்றுப் பகுதி மக்கள் அதிகளவில் பங்கேற்று வழிபட்டனர்.ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, நேற்று முன்தினம் (டிசம்., 31ல்) இரவு கிராமந்தோறும் இளைஞர்கள் கிராம வீதிகளில் பட்டாசு வெடித்தும், ஊர்வலமாக சென்றும் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
அதேபோல, கிணத்துக்கடவு புற்றிடங் கொண்டீஸ்வரர், பொன்மலை வேலாயுதசுவாமி, மாரியம்மன் கோவில் மற்றும் சூலக்கல் மாரியம்மன், பெரியகளந்தை ஆதீஸ்வரன், முத்துக்கவுண்டனூர் முத்துமலை முருகன் கோவில்களில் நேற்று (ஜன.,1ல்) அதிகாலையில் சிறப்பு பூஜை நடந்தது. பூஜையில், உள்ளூர் மட்டுமன்றி கோவை, பொள்ளாச்சி
பகுதி மக்களும் திரளாக பங்கேற்றனர்.