உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கோவில்களில் சிறப்பு வழிபாடு; பக்தர்கள் கூட்டம்

காஞ்சிபுரம் கோவில்களில் சிறப்பு வழிபாடு; பக்தர்கள் கூட்டம்

காஞ்சிபுரம்:புத்தாண்டை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காமாட்சியம்மன் கோவிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த, தெற்கு கோபுரம் வழியாக பொது தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், மாவட்ட காவல் துறை, கடும் கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.

இதனால், இளைஞர்கள் மத்தியில் கொண்டாட்டம் குறைந்து காணப்பட்டது.வழக்கமாக நள்ளிரவு நேரத்தில், இரு சக்கர வாகனங்களில் அதிக வேகத்துடன் பயணம் செய்வர். இது, பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.இதை தவிர்க்க, காஞ்சிபுரத்தில் பிரதான சாலைகளில் நேற்று முன்தினம் (டிசம்., 31ல்) இரவு, சாலைகளில் தடுப்பு அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

போதையில் வாகனங்கள் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல் துறை எச்சரித்திருந்தது. மேலும், பொது மக்களுக்களுக்கு இடையூறாக புத்தாண்டு கொண்டாடினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப் பட்டதால், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் அமைதியாக நடைபெற்றது.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம், காஞ்சிபுரம் சித்திரகுப்தர் கோவிலில் மட்டும், நள்ளிரவு தரிசனம் நடைபெற்றது. மற்ற கோவில்களில் வழக்கமாக, இரவு நடை சாற்றப்பட்டன.நேற்று (ஜன., 1ல்) காலை, அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த, பிரதான ராஜகோபுரம் பொது வழி தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டு, முக்கிய பிரமுகர் மட்டும் அனுமதிக்கப் பட்டனர்.

பொது தரிசனம் தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.எஸ்.பி.,பெருமிதம்புத்தாண்டு கொண்டாட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட அளவில், ஒரு விபத்து கூட பதிவாகவில்லை என, மாவட்ட எஸ்.பி., சந்தோஷ் தெரிவித்துள்ளார்.போலீசார் மட்டுமல்லாமல், அனைவரின் ஒத்துழைப்பு காரணமாகவே, விபத்துகளை தடுக்க முடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !