உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் 5ல் ஜெயந்தி விழா

ஆஞ்சநேயர் கோவிலில் 5ல் ஜெயந்தி விழா

திருத்தணி:வீரஆஞ்சநேயர் கோவிலில், வரும், 5ம் தேதி, அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. திருத்தணி, மேட்டுத் தெருவில், வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும் 5ம் தேதி, அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று, காலை, 8:00 மணிக்கு, பால்குட ஊர்வலம் நடைபெறுகிறது.

அதை தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, மூலவருக்கு பாலாபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, மாலை வரை, பஜனைக் குழுவினரின் பக்தி கச்சேரி நடக்கிறது. இரவு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக் கிறார்.இதே போல், நரசிம்ம சுவாமி கோவில், விஜயராகவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் ஆஞ்சநேயர் சன்னிதியில், வரும், 5ம் தேதி, வடமாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

கே.ஜி.கண்டிகை பஞ்சமூக ஆஞ்சநேயர் கோவிலிலும், அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்படுகிறது.

* மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டி கந்தசாமி கோவிலின், பின்புறத்தில் சென்றாய பெருமாள் கோவில் வளாகத்தில், வீரபக்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. வரும், 5ல் அனுமன் ஜெயந்தி விழா நடக்க இருப்பதையொட்டி, காலை, 6:00 முதல், 8:00 மணி வரை, 16 வகையான அபி ?ஷகம், தீபாராதனை; 9:00 முதல், மாலை, 5:00 மணி வரையில் அன்னதானம்; மாலை, 5;00 மணிக்கு, ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வருகிறார். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

* புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, கோவில்புதூரில், கரிவரதராஜபெருமாள் கோவிலில், ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. அனுமன் ஜெயந்தி விழா, வரும், 5ல், நடக்கிறது. இதையொட்டி, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்படுகிறது. இதேபோல், புன்செய்புளியம்பட்டி அடுத்த, அண்ணாநகர் கதிர்பெருமாள் கோவிலில் உள்ள, 36 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. பின், வடைமாலை மற்றும் துளசி மாலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !