ஆங்கில புத்தாண்டு பிறப்பு: தேவாலயத்தில் பிரார்த்தனை
திருப்பூர்:ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று (ஜன.,1ல்), திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடந்தது.ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் உள்ள, சர்ச்களில், நேற்று (ஜன.,1ல்), மாலை முதல் ஆராதனை நடந்தது.
நள்ளிரவு, 12:00 மணிக்கு சர்ச்களில் கூடியிருந்த கிறிஸ்துவ மக்கள், புத்தாண்டு வாழ்த்து பாடல்கள் பாடி, கொண்டாடினர். பரஸ்பரம், கேக் வழங்கி, புத்தாண்டு வாழ்த்து பரிமாறிக் கொண்டனர்.திருப்பூர் சி.எஸ்.ஐ., சர்ச், சபாபதிபுரத்தில் உள்ள, டி.இ.எல்.சி., சர்ச்களில், புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடந்தது. திருப்பூர் சிட்டி ஏ.ஜி., சபை சார்பில், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் ஆராதனை விழா நடந்தது.புத்தாண்டையொட்டி, சர்ச்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
புத்தாண்டு பிறந்ததும், சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி, சிறப்பு ஆராதனை செய்தனர்.இதேபோல், அவிநாசி, பல்லடம், காங்கயம் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்னை நடந்தது.
* உடுமலை:ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று (ஜன.,1ல்),, கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, உடுமலை சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச், அற்புத அன்னை ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில், புத்தாண்டு தின சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நள்ளிரவு, 12:00 க்கு, புத்தாண்டு, சிறப்பு திருப்பலி நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். புத்தாண்டிற்காக, சர்ச்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.