உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி, புத்தாண்டு கொண்டாட்டம்: விஸ்வநாதருக்கு சங்காபிஷேகம்

ஊட்டி, புத்தாண்டு கொண்டாட்டம்: விஸ்வநாதருக்கு சங்காபிஷேகம்

ஊட்டி:ஊட்டி, காந்தளில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. ஆண்டு தோறும் ஆங்கில புத்தாண்டான, ஜன., 1ல் கோவிலில் சங்காபிஷேகம் நடக்கும். நடப்பாண்டின் நிகழ்ச்சியை ஒட்டி காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, மகா பிரதோஷ அபிஷேகத்தை தொடர்ந்து நடந்த , 108 சிறப்பு சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இதேபோல், ஊட்டியில் உள்ள மாரியம்மன் கோவில், எல்க்ஹில் முருகன் கோவில், மஞ்சூரில் மாரியம்மன் கோவில், அன்னமலை முருகன் கோவில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !