காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் திருமுறை இன்னிசை விழா
ADDED :2507 days ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத திருமுறை இன்னிசை விழா நடந்தது.நால்வர் நற்றமிழ் மன்றம் சார்பில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நடந்த, மார்கழி மாத திருநெறி தமிழிசை விழாவிற்கு, காஞ்சி நகர செங்குந்தர் மகாஜன சங்க தலைவர், வ.காளத்தி, பேராசிரியர், ச.நடராசன் முன்னிலை வகித்தனர்.யாழிசை, முழவிசை முழங்க, நெய்வேலி ராஜபதி ஓதுவார் திருமுறை இன்னிசை நிகழ்த்தினார். இதில், மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.