அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பந்தியூர் ஆஞ்சநேயருக்கு 51,000 வடை
ADDED :2507 days ago
திருவள்ளூர்:அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பந்தியூர் ஆஞ்சநேயருக்கு, வரும், 5ம் தேதி, 51 ஆயிரம் வடை மாலை சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யபடுகிறது.திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, திருப்பந்தியூர் கிராமத்தில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், 5ம் தேதி, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, காலை, 11:00 மணியளவில், ஆஞ்சநேயருக்கு, 51 ஆயிரம் வடை மாலைகள் சாற்றி அலங்கார தரிசனம், மகா தீபாராதனை
நடைபெறுகிறது.தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், லட்சுமி குபேரர் திருமஞ்சனம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும்.மேலும், காலை, 9:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை ஹரி நாம பஜனை நடைபெற உள்ளது.