திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டு வசூல் ரூ.21.84லட்சம்
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நடந்து முடிந்த படித் திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு விழாவில், 21.84 லட்சம் ரூபாயை, பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலில், டிச., 31ம் தேதி, படித் திருவிழாவும், ஜன., 1ல், ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடந்தன. இதில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, மூலவரை வழிபட்டனர்.பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் முன்னிலையில், கோவில் ஊழியர்கள் எண்ணினர்.
இதில், 21 லட்சத்து, 84 ஆயிரத்து, 631 ரூபாய் ரொக்கம்; 66 கிராம் தங்கம்; 701 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.கடந்த ஆண்டு படித் திருவிழா மற்றும் புத்தாண்டு வசூல், 20 லட்சத்து, 53 ஆயிரத்து, 849 ரூபாய்; 10 கிராம் தங்கம்; 1,061 கிராம் வெள்ளி கிடைத்தன. அதாவது, கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில், 1.31 லட்சம் ரூபாய் அதிகம்.