உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் சுகாதாரக்கேடு கலெக்டர் கண்டிப்பு

ராமேஸ்வரம் கோயிலில் சுகாதாரக்கேடு கலெக்டர் கண்டிப்பு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கலெக்டர் வீரராகவராவ் கண்டித்தார். ஜன.,2ல் ராமேஸ்வரம் திட்டகுடி, மேலத்தெரு, கோயில் ரதவீதி ஓட்டல், டீக்கடைகள், வணிக கடைகளில் பாலித்தீன் பை, கப்கள் பயன்பாடு உள்ளதா, கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு செய்தார். பின் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்ற கலெக்டர், அங்குள்ள பிரசாத கடைக்கு சென்று ஜன.,1ல் சட்டம் அமலுக்கு வந்த பிறகும் பாலித்தீன் பாக்கெட்டில் ஏன் லட்டு விற்கிறீர்கள். இது தவறில்லையா என கடை ஊழியர்களை எச்சரித்தார். பின் கோயிலில் இடமாற்றம் செய்த தீர்த்த கிணறுகளை ஆய்வு செய்த போது, அப்பகுதியில் பக்தர்கள் வீசியெறிந்த கழிவு துணிகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் இக்கழிவு துணிகளை ஏன் அகற்றாமல் உள்ளீர்கள். இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படதா என கோயில் அதிகாரியை கண்டித்தார். ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., சுமன், கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கேசவதாஸ், ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !