சென்னிமலை கோவில் தேர்விழா: தற்காலிக கடைகள் 11ல் ஏலம்
ADDED :2565 days ago
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, தற்காலிக கடைகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சி நடத்த ஏலம் நடக்கிறது. சென்னிமலை முருகன் கோவில் தேர்த் திருவிழா வரும், 13ல் தொடங்கி, 26 வரை நடக்கிறது. இதில், 21 முதல், 25 வரை முக்கிய நிகழ்வுகள் நடக்கின்றன. இதை முன்னிட்டு, தற்காலிக கடைகள் அமைத்துக் கொள்வதற்கான சுங்க வசூல் உரிமம், வாரச்சந்தை வளாகத்தில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்த ஏலம் உள்ளிட்டவை, பேரூராட்சி கூட்ட அரங்கில், 11ம் தேதி, காலை, 12:00 மணிக்கு நடக்கவுள்ளதாக, செயல் அலுவலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.