விருதுநகரில் சரண கோஷ ஊர்வலம்
ADDED :2508 days ago
விருதுநகர்: சபரிமலையில் இரு பெண்கள் நுழைந்ததை கண்டித்தும், சபரிமலையின் பாரம்பரியம், ஐதீகத்தை சீர்க்குலைக்கும் நோக்குடன் செயல்படும் கேரள அரசை கண்டித்தும் விருதுநகரில் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் சரணகோஷ ஊர்வலம் நடந்தது.குருசாமி தனபால் தலைமை வகித்தார். தேசபந்து மைதானத்தில் துவங்கி ரதவீதிகளை சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வந்தனர். இதில் சரண கோஷங்கள் எழுப்பப்பட்டது. 200 க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.