தர்மபுரியில் சபரிமலை புனிதம் காக்க ஆர்ப்பாட்டம்
ADDED :2506 days ago
தர்மபுரி: சபரிமலை ஐயப்பன் கோவில், புனிதத்தை கெடுக்கும் வகையில், 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதித்த, கேரள அரசை கண்டித்து, இந்து முன்னணி சார்பில், தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக, எஸ்.வி., ரோட்டில் இருந்து, மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமையில், ஐயப்ப பக்தர்கள் சங்க பேரவையினர், பா.ஜ.,வினர், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் வரை, ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, கேரளா அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதில், ஐயப்ப பக்தர்கள் பேரவை நிறுவனர் முனுசாமி, ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் சந்திரசேகர், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.