வேலூர் மாவட்டத்தில் சக்தி அம்மா ஜெயந்தி விழா: 3 மாநில கவர்னர்கள் பங்கேற்பு
ADDED :2506 days ago
வேலூர்: வேலூர் மாவட்டம், திருமலைக்கோடி நாராயணி பீடம் சக்தி அம்மாவின், 43வது ஜெயந்தி விழா, நேற்று (ஜன.,3ல்) நடந்தது. இதையொட்டி, நாராயணி பக்தர்கள், யானை, குதிரை, கரகாட்டத்துடன், சீர்வரிசை தட்டுகளுடன், நாராயணி யாகசாலை மண்டபத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு, சக்தி அம்மாவுக்கு, பக்தர்கள் பாத பூஜை, மலர் அபிஷேகம், சிறப்பு பூஜை செய்தனர். இதில், அசாம் மாநில கவர்னர் ஜெகதீஷ்முக்தி, உத்தரகாண்ட் கவர்னர் பேபி ராணி மவுரியா, கர்நாடகா மாநில கவர்னர் வாஜூபாயி வாலா, கோவை காமாட்சிபுரி ஆதினம், வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், எஸ்.பி., பிரவேஷ்குமார் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, நாராயணி அறங்காவலர் சவுந்தரராஜன், ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ், நாராயணி பீடம் மேலாளர் சம்பத் ஆகியோர் செய்திருந்தனர்.