தேவதானப்பட்டியில் திருமணத்தடை நீக்கும் சித்திவிநாயகர்
ADDED :2501 days ago
தேவதானப்பட்டி: சில்வார்பட்டியில் பழமையான சித்திவிநாயகர்கோயில் உள்ளது தெற்கு பக்கம் சுவர் அருகில் எட்டு அடி பள்ளத்தில் லிங்கம் அமைந்துள்ளது. வெளியில் அரச மரத்தடியிலும் விநாயகர் உள்ளார்.
திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்யம் வேண்டுவோர் இம்மரத்தைசுற்றி வேண்டிச் செல்கின்றனர். மேலும் அதனைச்சுற்றி சர்க்கரை, பச்சரிசி தூவிச் செல்கின்றனர். எறும்புகள் இதை உண்ணும் போது குறைகள் நீங்கி வேண்டுதல் நிறைவேறி, நல்ல காரியம் நடக்கிறது என்பது நம்பிக்கை. காலை, மாலையில் பூஜை நடக்கிறது. சில்வார்பட்டி, நாகம்பட்டி, கதிரப்பன்பட்டி, தர்மலிங்க புரம் கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் விபரங்களுக்கு பூஜாரி கணேசனை 99527 26960 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.