உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யார் உண்மையான பக்தர்கள்

யார் உண்மையான பக்தர்கள்

சபரிமலை:சபரிமலையில் அனைத்துவயது பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரம், சிலரது முகமூடியை கிழித்துக்கொண்டு இருக்கிறது. அதே நேரம் உண்மையான பக்தர்கள் யார் என்றும் உலகுக்கு காட்டுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி, அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுப்ப கேரள மார்க்சிஸ்ட் அரசு எல்லா தகிடுதத்தங்களையும் செய்கிறது. பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி,  சமீபத்தில் பிந்து, கனகதுர்கா என்ற இரண்டு பெண்களை ரகசியமாக, போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் செய்ய வைத்தது.அப்போது அந்த பெண்களின் நெற்றியில்  விபூதியோ குங்கும பொட்டோ இல்லை. கடைசி வரை அவர்கள் வெறும் நெற்றியுடன் தான் இருந்தனர். பிறகு, அவர்கள் கொடுத்த பேட்டியிலும், நாங்கள் இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள். கடவுள்  நம்பிக்கை இல்லை என வெளிப்படையாக கூறினர். இது நாடு முழுவதும் உள்ள இந்து மதத்தினரையும் பக்தர்களையும் மனம் புண்பட செய்தது. அதே நேரம், நேற்று முன்தினம் செக் குடியரசை  சேர்ந்த 55 வெள்ளையர்கள், நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டு, பக்தி பரவசத்துடன் சதுரகிரி மலை ஏறி மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர். இந்து முறைப்படி வெளிநாட்டினர் சுவாமி தரிசனம்  செய்யும் அதே நேரத்தில் சில இந்தியர்களே, இந்து மத விரோதமாக நடந்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யாருக்கு உண்மையான பக்தி உள்ளது என்பதை தோலுரித்து  காட்டி உள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !